நல்லடியார் -சிறுகதை (ஆசிரியர்:அனிசா புதல்வன் )
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
டமாரென்று கோடாரி பலமாய் தலையில் அடித்ததில் உருக்குலைந்து விழுந்தேன் . கால்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறி கிடந்தன. உறுப்புகள் ஒன்றெடொன்றாய் இணைக்கமுடியாத அளவுக்கு என்னுடல் சிதறி கிடந்தது.
"அன்று இதுபோன்று ஒரு சிதைந்த நிலைமையில் விபத்தில் சிக்கிய எங்கள் ஊர் ஜமாத் தலைவரின் உடலை பொறுக்கி எடுத்து வந்தனர் . வீட்டில் இறுதிசடங்கில் அவரை சொந்த வீட்டு கட்டிலில் படுக்க வைத்திருந்தனர் ".
"பள்ளிவாசலின் உட்புறத்தின் அறையில் ஒன்றில் தான் நான் தங்கியிருந்தேன் . தினம் அல்லாஹூ அல்லாஹூ என்று ஓதி கொண்டே இருப்பேன். நல்லவர்களின் இறுதி சடங்கில் மட்டுமே கலந்து கொள்வது தான் என்னுடைய கொள்கை அத்தகைய நல்லடியார்களின் இறுதி சடங்கில் என்னை அழைத்து செல்லும்போது அழைத்துசெல்பவர்களுக்கு சுலபமாக இருக்கும்படியாய் என்னை மாற்றிகொள்வேன் . "
அன்று ஊர்தலைவரின் மரணம் குறி்த்து இருவர் என்னருகில் பேசி கொண்டிருந்தது என் நினைவில் வந்து போய் கொண்டிருந்தது .
"நெஞ்சுல இரக்கமில்லா மனுசனோட மவுத்து(மரணம்) யாரும் இரக்கப்படுற மாதிரி இருக்காது " என்றார் ஒருவர்.
மற்றொருவரோ "மற்ற உயிர்கள் மீது இரக்கம் கொள்பவர் மீதே இறைவனின் இரக்கம் என்று முகம்மது நபி சொன்னது உனக்கு தெரியாதா ?" என்றார்.
அப்போதிலிருந்தே நாம் போக அருகதையற்ற இடமாக முடிவானது தலைவரின் இறுதி யாத்திரை. அன்று தலைவரின் மகன் வலுக்கட்டாயமாக என் அறையிலிருந்து அழைத்து செல்ல முயன்றார். முடிந்தவரை என்னுடலை கணத்தால் பெருக்கிகோண்டேன் அறையை விட்டு என்னை கிளப்பமுடியாத அளவுக்கு.
அவனுக்கு கோபம் பீறிட்டு என்னை எட்டி உதைத்தான் என் தலையில் இருந்த ஆணி குத்தி அவன் காலில் குத்தியது . இரத்தம் வழிந்தோடிய நிலையிலே அவனின் சபதம் நிறைவேறாமல் என்னை விட்டு பிரிந்து சென்றான்.
ஒரு வழியாக தலைவரின் நல்லடக்கம் முடிந்தது . புதிய தலைவராக அவரது மகன் பதவியேற்ப்பு வெள்ளி கிழமையான இன்று. பதவியேற்ற கையோடு கோடாரி சகிதமாக ஒருவரோடு வந்திறங்கினான் .
" மய்யாத்தாங்கரை(இடுகாடு) கட்டில் இனி மய்யத்(இறந்தவரின் உடல் )வைக்க லாயக்கில்லை. அது காலெல்லாம் உளுத்து போச்சு . உடைச்சு கொண்டு போயி வீட்டுல போடுனு " என்று. சொல்லிக்கொண்டே என் தலையில் பலமாக கோடாரியால் தாக்கினான். ஒவ்வொன்றாய் என்னை கோடாரி கொண்டு சிதறடித்தான். கட்டில் அழுதுகொண்டே உயிரிழந்தது . அதன் திக்ரு பெரும் ரணமாய் வெளிப்பட்டது . சதா காலம் இறைவனை புகழ்ந்து கொண்டிருந்த உயிர் விடை பெற்றது.

அன்று பள்ளிவாசல் வெள்ளிகிழமை பிரசங்கமாக ஒலிக்கிறது .
"யுக இறுதி நாள் ஏற்ப்படகூடிய அடையாளங்களில் ஒன்று. அவனை சதா காலம் புகழ்ந்து கொண்டிருக்கும் நல்லடியார்களை உலகம் இழந்து கொண்டு வருவது ".

No comments:
Post a Comment