இஸ்லாம் என்று சொன்னாலே சாந்தி , அமைதி என்று பொருள் அதன் காரணத்தினாலே
இஸ்லாம் வாழ்வியல் சிந்தனையும் சமூக நெறிகளையும்
போதிக்கும் மனிதன் கடந்து செல்ல கூடிய உன்னத பாதையாகவே நமக்கு கொடுத்துள்ளார்கள் நம் கண்ணியமிகு ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
அன்பையும் மனிதமும் மூலதனமாக செயல்படும் இம்மார்க்கத்தை இன்று வேறு விதமான அர்த்த தெரிவுகளில் புரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலைகளில் நாம் தள்ளிவிட்டு
வேடிக்கை பார்கின்றோம்.நம்மை மற்றவர்கள் ஒரு வெறுப்பான சூழ்நிலையிலே சூழலிலே நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் .
எதனால் இத்தகைய இழப்பு ? நம்முடைய சுய அடையாளத்தை இழந்ததன் விளைவு என்ன?
அய்யாமுல் ஜகீலியா கோர தாண்டவம் ஆடிய அரேபிய தீபகற்ப்பத்தில் மாற்றம் ஒன்று மாற்றம் தேடிய போது இருள் போக்கும் விடிவெள்ளியாக பிறந்தார்கள் . அன்னாரின் பிறப்பு அந்த சமுதாயத்திற்கு
இதய அறுவைசிகிச்சையாக திகழ்ந்தது அதன்விளைவு இன்று நம்மில் ஈமானின் சுவாசம் தரிபட்டு கொண்டு இருக்கின்றது.
இதய அறுவை சிகிச்சை என்பது இன்று நம்மில் பல பேர் இரத்த நாளங்களின் அடைப்பு காரணமாக அதனை செய்து கொள்கின்ற சிகிச்சை நம் ஞாபகத்திற்கு வருகிறது.ஆனால் பூமான் நபிகள் இந்த சமுதாயத்திற்கு
செய்த சிகிச்சை இதய சுத்திகரிப்பு
என்னும்அக சுத்திகரிப்பு சிகிச்சை.
"உடலில் ஒரு சதை துண்டு உள்ளது அது சரியானால் மனிதனின் முழு வாழ்வும் சரி
ஆகிவிடும் " என்று பொருள் படும் நபிகளாரின் பொன்மொழி ஒரு மனிதனுக்கு கல்ப் என்னும் அக பரிசுத்தத்தை எவ்வளவு முக்கியம் முழுமையாக கோடிட்டு காண்பிக்கிறது. எத்தனையோ இறைவசனங்கள் மார்க்கத்தை புறக்கணித்தவர்கள் பற்றி இறைவன் குறிப்பிடும் போது "அவர்களின்
இதயங்களில்
அவன் முத்திரை இட்டுள்ளான்
" என்று பொருள்படும்
அர்த்த கோர்வைகளை நாம் திருமறையில்
கண்டு இருக்கின்றோம்.
"மனிதனின் மாற்றம்
இதயத்தில்
இருந்தே
தொடங்குகின்றது ". என்று ஒரு அறிஞரின் எழுத்தை நாம் ஆமோதிக்க வேண்டும் என்று தான் தோன்றுகின்றது . எண்ணங்கள் எழும் புள்ளியிலே செயல்களின் உதயம் என்று கல்புடைய பரிசுத்தத்தை அவசியம் என்று மார்க்கம் போதிக்கின்றது.
எண்ணங்கள் மற்றும் செயல்கள் அடிப்படையிலேயே நல்லோர், தீயோர் என்று இறைவனின் இறுதி தீர்ப்பு ரகசியமாய் அமைகிறது . நீ
எதை விரும்புகின்றாயோ அதையே
உன் சகோதரனுக்கும் விரும்பு என்று நபிகளார் சொல்வது நாம் இப்போது பிறர் நலன் அக்கறையில் நாம் எவ்வாறு செயல்படுகின்றோம் என்பதை நம் முகத்தில் அறையும் வாக்கியம் . எண்ணங்களே நற்பண்புகளுக்கு அடித்தளம் நாயகம் ரசூலே கரீம்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 300 க்கும் அதிகமான நற்பண்புகளை
கொண்டுள்ளார்கள்
என்றும் அதில் அதிகமாக பிறர் நலன்களை தன் நலன்களாக எண்ணும் போக்கு தான் அவர்களை அமீன் என்றும் சாதிக் என்றும் மாற்று மதத்தவர்களும்
அழைக்கலாயினர்.
அவர்களை பின் தொடர்ந்த்த நபி தோழர்களும் அந்த அக சுத்திகரிப்பு முறையில் சிறந்தார்கள் . இன்று கூட பெருமானாரின் சுன்னத்தை பேணும் வாழ்வில் தான் வெற்றி உள்ளது என்றும் பேணும் நல்லோர்கள் வரலாற்றின் முதல் பக்கத்தை பிடிகின்றனர்.
இன்றைய மக்களின் நிலை குறிப்பாக இளைஞர்களின் நிலை சுன்னத்தை தவற விட்டதால் மார்கத்தை பற்றி தவறான புரிந்துணர்வு வெளி உலகில் பரவி கிடக்கின்றது. நான் மார்க்கத்தை சுத்த படுத்தி தெளிவான மார்க்கத்தை போதிக்க போகிறேன் எனும் பேர்களில் பலர் தன்னை முதலில் சுத்த படுத்தி மார்க்கத்தில் இன்னும் நாம் தெளிவு பெற வேண்டும் என்று நினைக்கும் உள்ளங்கள் மிக குறைவு . அகசுத்தம் இல்லா மனிதனின் போதனை பிற மக்களுக்கு விழலுக்கு இறைத்த நீர் போல் ஆகிடும்.
நாளை இறைவன் நீ எவ்வாறு மக்களுக்கு மார்க்கத்தை
போதித்தாய் என்பதை விட மார்க்கத்தை கொண்டு நீ எவ்வாறு உன்னை பண்படுத்திகொண்டாய் என்று இறைவன் கேட்காமல் விடமாட்டான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆன்மா மற்றும் கல்பின் பரிசுத்தம் மிக அபரிதமானது. அதனை கொண்டு அவர்கள் மற்றவர்களின் இதயத்தில் இஸ்லாம் எனும் அருள் தீபத்தை ஏற்றவும் முடிந்தது. அதே சமயம் அதை கொண்டே எதிரிகளின் உள்ளத்தில் அவர்களை பற்றிய பயத்தையும் போட முடிந்தது. அது தான் உண்மையான வெற்றி . நபிகளாரை பற்றி ஒரு வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகையில் பல்வேறு மலைகள் இடம் பெயர்ந்த வரலாறு நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் பல இதயங்கள் மனித நேயம் பக்கம் புரண்ட வரலாறு அது நபிகளாரின் வருகை கொண்டே என்று நாம் வரலாற்றில் பார்க்க முடிகின்றது.
எந்த கல்பை கொண்டு நபிதோழர் உமரின்(ரலியால்லாஹு அன்ஹு) கல்பை நபிகள் நாயகம் புரட்டினார்களோ அதே கல்பை கொண்டே அபுஜஹீளின் உள்ளத்தில் அன்னாரை பற்றிய பயத்தையும் அல்லாஹ்வின் உதவியால் போட்டார்கள்.
நாம் அல்லாஹ்வை அர்ஷிலே வைத்து விட்டு நாம் வெகு தூரம் விலகி நின்று கொண்டு இருக்கின்றோம். அல்லாஹ் திருமறையிலே மூமின்களின் கல்பே நான் அமர கூடிய சிம்மாசனம்(அர்ஷ்) எனும் பொருள் படும்படியான வசனங்களை அமைத்து உள்ளான். ஆனால் இன்று நம்முடைய நிலைமை கல்ப் என்னும் அக வீடு மனோஇச்சையின் பால் செயல்பட்டதன் விளைவு நம்முடைய நப்ஸ் களின் தீங்கான பெருமை ,
கர்வம்,அகங்காரம்,குத்திகாட்டுதல், புறம்,பொய்,அவதூறு,நையாண்டி பேச்சுக்கள் என்று நீண்டு கொண்டே போகிறது நம்முடைய அமல்கள்.
மார்கத்தை ஏற்றுக்கொண்டு அதற்க்கு புறம்பான நடவடிக்கைகள் மேற்கொள்வது முனாபிக் என்னும் நயவஞ்சகர்களின் இரட்டை வேடதாரிகளின் பண்புகளுக்கு ஒப்பாகும்.
ஹிதாயத் என்பது அல்லாஹ் தலா இதயத்திலே ஏற்படுத்துகின்ற ஒரு விசை அவ்விசை மற்ற மனிதர்களை நம் பால் ஈர்க்க செய்யும். அவ்விசையை வலுபடுத்த வேண்டும் என்றால் நம்மை நாமே நமக்கு செய்து கொள்ள வேண்டிய இதய சுத்திகரிப்பு என்னும் அறுவை சிகிச்சை.
1. செய்த தவறுகளுக்காக அல்லாஹ்விடம் வழமையாக பாவ மனிப்பு தேடல்.
2. எந்த ஒரு காரியம் செய்யும் முன்னும் இதில் அல்லாஹ் ரசூலின் விருப்பம் எதுவாக இருக்கும் என்று ஆராய்ந்து அதன் பிரகாரம் காரியங்களை அமைத்துகொள்வது.
3. அல்லாஹ்வுடைய தியானத்தை கொண்டே இதயங்கள் அமைதி பெறுகின்றன. எனவே கூடுமானவரை இறை திருநாமங்களை கொண்டு இதயத்தை ஆட்சுவாசப்படுத்துவது.
4. பொறுமையை கொண்டும் தொழுகையை கொண்டும் இறைவனிடத்தில் தேடுவது.
எல்லா தேவைகளையும் இறைவனே பூர்த்தி செய்கிறான் மேலும் அவனிடமே
மேற்கொண்ட தேவைகளை பூர்த்தி செய்யும் படி இறைஞ்சுவது.
5. நப்ஸ்டைய தீங்குகளான அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபடல்.
மேற்கொண்ட பயிற்ச்சிகளும் இன்னும் நாயகம் திருமேனி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழி முறையிலும் நம்முடைய துரோகிகளான நப்ஸ் யும் சைத்தானையும் விரட்டி நம்முடைய அகத்தை சுத்த படுத்தி கொள்ள முடியும்.அத்தகைய பாக்கியத்தை நமக்கு என்றென்றும் தந்தருள்வானாக ஆமீன் !

No comments:
Post a Comment