பொக்லைன் - சிறுகதை (ஆசிரியர்:அனிசா புதல்வன்)
விர் ...விர் ..விர் ..விர் .." என்று ஒரே சத்தம் ..விளையாட்டு பொக்லைன்கள் வட்டமாய் நின்று சத்தமிட்டு கொண்டிருந்தன தெருவில் .சிறுவர்களின் ஆராவார சத்தமும் பெருகி பெரும் சத்தமாக ஓடி கொண்டிருந்தது .
"கொர் ..கொர் ..."என்று ஒரு சிறுவனின் வாய் மட்டும் தனியாய் ஒரு சத்தம் அந்த சிறுவர்களின் சத்தங்களில் இருந்து புறக்கணிக்கப்பட்டு ஒலித்து கொண்டிருந்தது .
"டேய் அசீமு லூசு ...என்னடா கையை பொக்லைன் மாதிரி வளச்சு வச்சுக்குறே .. வாயுல பொக்லைன் மாதிரி சவுண்டு விடுறே .. இது எல்லாம் பொக்லைன் ஆயிடுமா..கெக்கே.. கெக்கே "என்று சிரித்து அசீமிடம் ஒரு வாண்டு வம்பிழுத்து கொண்டிருந்தது .
"டேய் உன்னோட நிஜ பொக்லைன் கையை நினச்ச நேரம் நீட்டவும் முடியாது .நினச்ச நேரம் குறைக்கவும் முடியாது ..என்னோட கைய பாத்தீயா ..நீட்டிக்குவேன் ..குறைச்சுக்குவேன்...சுவர் மேல உன் பொக்லைன் ஏறுமாடா ..பாரு என் கைய சுவர் , குளம் , தண்ணி ,கடற்கரை ,பள்ளிகூடம் எல்லாத்துலயும் ஏறும் டா "என்று கேலி செய்த தன் நண்பனிற்க்கு பதில் சொல்லி விட்டு தன்னுடைய பொக்லைன் கையை வளைத்து
"கொர் ..கொர் .."என்று சப்தம் எழுப்பிக்கொண்டே தனது கை பொக்லைனை கிளப்பினான் .
அசீமுக்கும் நிஜ பொம்மை பொக்லைன் வாங்கி தன்னுடைய நண்ப சிறுவர்கள் போல் விளையாட வேண்டும் என்று ஆசை தான் . குடும்ப சூழ்நிலையும் வறுமையும் அவனுடைய ஆசைகளுக்கு தீனி போடவில்லை .தன்னுடைய மூன்று வயதிருக்கும்போது மீன் பிடிக்க சென்ற அத்தா திரும்பவே இல்லை. வறுமையை சிறுவயதிலே உணர்ந்தவன் அசீம்.
மற்ற குழந்தைகள் பொக்லைன் வைத்து விளையாடும்போது அவன் மட்டும் தன்னுடைய கையை பொக்லைன் கைகளாக மாற்றி மண்ணை தோண்டி குழி பறிப்பது ,கற்களை தூக்குவது என்று விளையாடி கொண்டிருப்பான் .
"அசீமு ..அசீமு ..அத்தா " என்றாள் ஆமீனா .
"உம்மா ..என்னம்மா "
"அசீமு உனக்கு முஜிபு மாமா பொக்லைன் பொம்மை வாங்கி பார்சல் போட்டிருக்காம் "
ஒரே சந்தோசம் அசீமுக்கு . வெகு நேரம் கையை பார்த்து கொண்டிருந்தான் . தன் கையை பார்த்து புன்னகைத்தான்.
"எப்படி இருக்கும் அது.. அசார் வச்சிருக்கானே அது மாதிரி இருக்குமா ...அப்துல்லா வச்சிருக்கானே அது மாதிரி இருக்குமா ..அவனுங்க எல்லாம் ஊருல வாங்குனாங்க ..நம்மளுக்கு துபாய்லேர்ந்து வருது ..அது பெரிய பொக்லைனா தான் இருக்கும் " என்று பலவாறு நாளை வரப்போகும் பொக்லைன் பற்றி பலவாறு கனவுகள் கண்டுகொண்டிருந்தான். கைகளை தரைக்கு மேல் வைத்துகொண்டு தனக்கு வரப்போகும் பொக்லைனை வெற்றிடத்தில் கற்பனை செய்துகொண்டு ஆசைகளின் புழுதியை கிளப்பி கொண்டிருந்தது .
அன்றிரவு அவனது அம்மா ஆமீனா அவன் கைகளை கண்டாள் பொக்லைன் போல் வளைத்து கொண்டே படித்திருந்தான் .மெல்லமாய் புன்னகைத்து அவனது தலையை வருடினாள் .
மறுநாள் காலை ...
"வீட்டுல யாரும்மா ..பார்சல் வந்திருக்கு " போஸ்ட்மேன் பிளிறிகொண்டிருந்தார்.
"இதோ வந்துட்டேன் "உள்ளிருந்து ஒரு குரல்..
"யாரும்மா இதுல ஆமினா "...
"நான் தான் "...
"இதுல ஒரு கையெழுத்து போடுமா "..
ஆமினா பார்சலை பிரித்தாள். மிக அழகிய பொக்லைன் அசீம் எதிர் பார்த்தது போல் பெரிய பொக்லைனும் கூட . சற்று முன்பக்கம் திருப்பினாள் பொக்லைன் வேறு ..பொக்லைன் கை வேறு என்று இரண்டாக உடைந்திருந்து. பார்சல் முறையாக கையாளப்படாததால் அது உடைந்திருக்கலாம் .அவள் அதை கண்டதும் அதிர்ந்துவிட்டாள் . பொக்லைன் கைகள் உடைந்தது போல் அசீமின் ஆசைகளின் கைகளும் முறிந்து விட்டன .
அழுது கண்ணீர்விட்டாள் ஆமீனா .
"உம்மா..உம்மா ..அஸ்ஸலாமு அலைக்கும் "என்றான் அசீம் மதரசாவிலிருந்து திரும்பியவனாக ..
"ஏம்மா அழுகுறே "...
"ஒண்ணும் இல்லடா ..வெங்காயம் வெட்டுனேன் அதான் .." என்று கண்ணீர்துளிகளையும் உடைந்துப்போன பொக்லைன் பொம்மையையும் அசீமின் கண்களில் இருந்து மறைத்தாள் ஆமீனா .
"உம்மா....உம்மா .."
"சொல்லு..."
"மாமா அனுப்புன பார்சல் இன்னக்கி தான வரும் "
அழுகை ஆமீனாவிற்க்கு கண்களை பொத்துக்கொண்டு வெளியேறியது லாவகமாய் கண்ணீர் மொட்டுக்களை அடக்கியவாறு ..
"இன்சா அல்லாஹ் அது வரும் ஆனா இன்னைக்கு அது வரல .."
"போம்மா எப்ப பார்த்தாலும் இத தான் நீ சொல்லுவே ..அத்தா எப்ப வரும்னு கேட்டாலும் இத தான் நீ சொல்லுவே ..."என்றான் கோபமாக .
"இல்ல அசீம் ..அத்தாவும் பொக்லைனும் சீக்கிரமே நம்மகிட்ட வந்துடுவாங்க "என்றாள்.
அசீம் வேகமாய் "கொர் . .கொர் .."என்று கிளம்பினான் தெருவை நோக்கி வழமையாய் கைகளை வளைத்து கை பொக்லைன் செய்தான் .அது சுவர்களில் பாய்ந்து காடு மேடுகளை தாண்டி பரந்தது.
அசீமின் கை பொக்லைனின் பலத்த சத்தமும் ஆமீனாவின் கண்ணீரின் ஈரமும் ஒரு சேராய் இறைவனின் சன்னிதானங்களை அடைந்தன .
மறுநாள் காலை செய்திகள் இவ்வாறு ஓடியது "இலங்கையின் புதிய அரசு பதவியேற்றமையின் காரணத்தினாலும் ..இந்தியாவுடனான அதன் நல்லெண்ண உறவு மேலும் மேம்படும் பொருட்டு மூன்று ஆண்டுகளாய் இலங்கை சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் தமிழகத்தை சேர்ந்த பத்து மீனவர்கள் விடுதலை "
ஆமினாவின் கண்களுக்கு அந்த செய்தி சந்தோசத்தை கொடுத்தன எனில் அந்த பத்து பேர் பட்டியலில் தன் கணவரின் பெயரையும் உறுதி செய்திருந்தார்கள் .
போன் ஒலித்தது மறுமுனையில் இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் அழைப்பு அது "நாளைக்கு காலையில் உங்கள் கணவர் திருச்சி ஏர்போர்ட் வந்திடுவார் . " என்று ஒரு செய்தியுடன் இணைப்பு துண்டிக்கப்பட்டது .
அசீமின் அத்தா இலங்கை விமான நிலையத்தில் அவனுக்காக ஒரு பொக்லைன் பொம்மையை வாங்கி பையுனுள் திணித்தார் ..
(முற்றும் )